Sunday, 26 June 2011

அகதியாய் அலைகிறேன்

உன் உதடுகள் கோபத்தில் படும் பாட்டினை கண்டபொது 
என் மனதிற்குள் பூகம்பம் வந்தது !!!
உன் ஈரப்பதமுள்ள கண்களைக்காணமல் 
என் நாட்கள் பாலைவனமானது
என்னிடம் பேசாமல் வேறொரு பெண்ணிடம் 
பேசும்போது மனதிற்குள் எரிமலை வெடித்தது 
எங்கே சென்றாய் அமைதியாய்
என் மனதுள் சுனாமியை ஏற்படுத்திவிட்டு ?
அத்தோடு நீ நிறுத்தி விடவில்லை 
அதன் அதிர்ச்சியிலிருந்து மீழ வாய்ப்பில்லாமல் 
என் மனதை முழுதுமாக அடித்து சென்று விட்டாய்......
முற்றும் தொலைத்த அகதியாய் அலைகிறேன்
உன் மனதினுள் அடைக்கலம் தருவாயோ? 

Friday, 24 June 2011

அகம்பாவம்

அகம்பாவம் என்னும் பிசாசே
என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய்?
இது அனைவருக்குள் இருக்கும் பேயி தானோ?
அரை குடம் தழும்பும் எனபது சரி தானோ?
இன்று தான் உணர்ந்தேன் நீ என்னை ஆட்டிவைப்பதை
சிறு வெற்றி பெற்றால் ஏன் முதலில் உன் மூக்கை நுழைக்கிறாய்?

தன்னடக்கம் உன் எதிரியோ?
என் மனம் தன்னடக்கத்தை  நாடினால் , அதை உன்பக்கம் இழுக்கிறாய்
என்னை விட்டு வை , நான் எதுவும் சாதித்துவிட வில்லை என்று அலறுகிறது என் மனம்...
இப்பிசாசினை வென்று வாழ்பவர் மகான்களோ?
எனக்கும் கற்றுக்கொடுங்களேன் இப்பிசாசினை வெல்ல .....

உழைப்பு

உழைப்பால் அகற்றலாம் மனப்பால் !
வெற்றியை இழுக்கலாம் நம் பால் !!
வெற்றிக்கு இது தான் தாய்ப்பால்

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கையின் மறு உருவம் அன்னை தெரசா
தன்னம்பிக்கையை எனக்கு புரியவைத்தது பாரதியின் கவிதை
தன்னம்பிக்கையை என்னக்குள் உணரவைத்தது என் ஆசிரியரின் அன்பு
தன்னம்பிக்கையை ஊட்டியது என் அன்னை !!!

இயலாமை

இயலாமையின் மடியில் சிக்கித் தவிக்கும்
என் மனதிற்கு சிறிது ஓய்வு தந்த/தரவிருக்கும் மெழுகுவத்தியே
மெழுகுவத்தியை ஏந்த விருக்கும் தமிழ் மக்களே
தங்களுக்கு என்ன நன்றியை எப்படி தெரிவிப்பேன் ?
தமிழ்நாடிற்கு 1000 மயில்கள் அப்பால் இருக்கும் என்னால்
இதை பற்றி நினைக்க மறந்தாலும் மறக்க நினைப்பதில்லை
நான் இங்கே இருப்பினும் என் மனது மரினாவையே சுற்றும் !!!!

Tuesday, 21 June 2011

மறுபடியும்

மறுபடியும் அரக்கர்களின் கொட்டம்
ஏ மனமே ஏன் இந்த கொடுமை?
அரக்கனே ஆயிரக்கணக்கான தமிழர்களை விழுங்கினாய்
இன்னும் உந்தன் தாகம் அடங்க வில்லையா?
எப்பொழுது அடங்கும் உன் குருதி தாகம்?
எங்கழுடைய சகோதரர்களை விட்டு வெய் .....
உன்னை போன்ற அரக்கர்கள் இதிகாசத்திலும் படித்த இல்லை
இதிகாசத்தில் இடம் பெயர்க்கவோ இவை அனைத்தும் ?
பின் வரும் தலைமுறை உன்னை நிந்திக்கும் என்பதை மறந்தாயோ?
மனிதனாக பிறந்ததற்கு என்ன செய்தாய் உன் சந்ததிகளை வளர்த்ததை தவிர ?

அப்பாவி மீனவர்கள் பலி
உப்பு தின்றவன் தண்ணி அருந்த வேண்டும்
என்றால் இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் பலிஆகிரார்கள் ?
உப்பு தின்றவன் எப்பொழுது தண்ணி அருந்துவது ?
அரக்கர்களின் கொட்டம் அடங்காதோ ?
பராசக்தி , கிருஷ்ணா பகவான் எல்லாம் பொய் தானோ?

Loneliness





Many times i have been deserted,

passed my days frustrated

Want to go back to my childhood,

within the secured hands of motherhood


Just want to give a damn,

with peace and calm


started watching the world though my window,

Excited with the flying colours of rainbow,


O my buddy clouds, are you in my state,

that is why you cry (rain) to show your lonely state??


even nature is nodding your loneliness with music (thunder)

Poets started writing poems for your music


My soul started dancing in the rain,

realised worrying is mere vain


My dear clouds,not to stop your cry,

wanna thank you for teaching me to try,


Learnt how to be bold,

amidst hot and cold


Lonliness gave me a new track,

It taught me not to look back..