Friday, 21 December 2012

உன்னால் .......

சூரியனுள் இருட்டை தேட முடியுமா ?
நல்லிரவில் ஒளியை தேட முடியுமா ?
தண்ணீரில் கரைந்த உப்பை தேட முடியுமா ?
சேற்றில் தண்ணீரை மட்டும் தேட முடியுமா ?
என்னுள் தெய்வத்தை தேட ,
ஆட்டிப்படைக்கும் அரக்கத்தனம் தழைத்தோங்கி எழ
அவ்வபோது எழத்துடிகும் தெய்வத்தை சின்னா பின்னாமாக்கிவிட
இருளில் வழி அறியா  பறக்கும் பூச்சி ஆனேன்...
காற்று எட்டு திசையிலும் என்னை சுழட்டி அடிக்க
கண்களில் பெரும் மழை பொழிய
என்னுள் உரமின்றி கால்கள் சோர்வுற்று
கைகள் பலம் இழந்து செவிகள் செயல் எழந்து
என் மூளை முக்கி திணற கண்கள் சொருகி
மண்ணுள் புதைந்தேன் இறுதியாய் செயலற்று .......
அனைத்திற்கும் மூல காரணமான வாயே உன்னால் .......

உன் கட்டளையை நான் கூற முற்பட
என் நாக்கு படாத பாடு பட்டது
சிறு வெட்கமும் இல்லை உனக்கு வார்த்தையை  மாற்றி கூற கட்டளையிட?
சுவை இழந்து ருசி இழந்து நாக்கு வறண்ட
பற்கள் நெருட வயிறு எரிய கண்கள் சொருக
செவி மறுத்து போக கை கால்கள் செத்து விட
உள் நாக்கு உள் இழுக்க
சரிந்தேன் இறுதியாய் .....
அனைத்திற்கும் மூல காரணமான மனமே உன்னால் .......








Thursday, 20 December 2012

பப்பு புவா போல் வருமா?

மெத்த சமைத்த அறை ...
தாய் (Thai) கலாச்சாரத்தின் சித்திரங்கள் ...
பாங்காய்  அமைந்த மேசை நாற்காலிகள்
மேசை மீது மெழுகுவத்தி ......
உயர் தர உணவு பட்டியல் படி உணவும்தரப்பட்டது ....
பல்சுவை நிறைந்திருந்தது...
அனைத்தும் நிரந்த இடத்தில் ஒரு குறை...
என்ன தான் Thai உணவகமாய் இருந்தாலும்....
தாயின் அன்பும் பரிவும் நிறைந்த பப்பு புவா போல் வருமா?


Monday, 3 December 2012

கனவு இல்லா உறக்கம் வேண்டும்

பயம் இல்லா இருள்  வேண்டும்
சினம் இல்லா தருணம் வேண்டும்
துக்கம் இல்லா நினைவு வேண்டும்
வெறுப்பு இல்லா மனம் வேண்டும்
எதிர்பார்ப்பு இல்லா அன்பு வேண்டும்
கெட்ட அலைகள் இல்லா கனவு வேண்டும்
கனவு இல்லா உறக்கம் வேண்டும் ......

உறங்க விடு போதும்!!!

மனமே  நீ ஞானியாக வேண்டாம் !
அதே சமயத்தில் தீவிரவாதியாக என்னை
சித்திரவதை செய்யவும் வேண்டாம் !!
கீதசாரத்தின் படி நடுநிலையில் இருந்து
என்னை கொஞ்சம் உறங்க விடு போதும்!!!