Wednesday, 26 March 2014

முன் முதற் பொருளே!!


முன் முதற் பொருளே
எனக்கு அருள்வாய் அருளே!

தும்பிக்கையால் தருவாய் நம்பிக்கை
மனமே உனது இருக்கை

 படைத்தோம் உனக்கு கொழுக்கட்டை
அருள் வேண்டி காத்திருக்கும் நான் வெறும் கட்டை !

Thursday, 20 March 2014

பசி இல்லா உயிர் பிணமோ ?

பசி இல்லா உயிர் பிணமோ ?
பசியை துறந்தால் ஞானியோ?

கடவுளுக்கும் பசிக்குமோ?
அதற்குத்தான் நிவேதனமோ?

பசி இல்லாவிடில் உழைப்பு வேண்டாமோ ?
அகிலமும் சோம்பேறிகளாகி விடுவோமோ?

அன்னதானம் தேவை இல்லை
ஹோட்டல்கள் தேவை இல்லை

டாக்டர்கள்  தேவை இல்லை
ஏன் கோவில்கள் கூட தேவை படாதோ ?
ஏழை பணக்காரன் பாகுபாடு இராதோ?

பசி /ருசி ???

பசித்தவனக்கு  ருசி தேவை இல்லை
ருசிப்பவனுக்கு பசி அவசியமில்லை
பசியை ஆழும் வயிற்றுக்கும்
ருசியை ஆழும் நாக்கிற்கும்  போட்டி
பசி வென்றது ருசியை!!