Friday, 24 June 2011

அகம்பாவம்

அகம்பாவம் என்னும் பிசாசே
என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய்?
இது அனைவருக்குள் இருக்கும் பேயி தானோ?
அரை குடம் தழும்பும் எனபது சரி தானோ?
இன்று தான் உணர்ந்தேன் நீ என்னை ஆட்டிவைப்பதை
சிறு வெற்றி பெற்றால் ஏன் முதலில் உன் மூக்கை நுழைக்கிறாய்?

தன்னடக்கம் உன் எதிரியோ?
என் மனம் தன்னடக்கத்தை  நாடினால் , அதை உன்பக்கம் இழுக்கிறாய்
என்னை விட்டு வை , நான் எதுவும் சாதித்துவிட வில்லை என்று அலறுகிறது என் மனம்...
இப்பிசாசினை வென்று வாழ்பவர் மகான்களோ?
எனக்கும் கற்றுக்கொடுங்களேன் இப்பிசாசினை வெல்ல .....

No comments:

Post a Comment